×

கோழியாளம் கிராமத்தில் ரெட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழா

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த கோழியாளம் கிராமத்தில் ரெட்டைமலை சீனிவாசனின் 163வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தை கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் சூ.க.விடுதலை செழியன், மாவட்ட துணை செயலாளர் விஜயகுமார், மாவட்ட பொருளாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் தயாநிதி அனைவரையும் வரவேற்றார். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளரும், விழுப்புரம் எம்பியுமான ரவிகுமார் கலந்து கொண்டு தாத்தா ரெட்டைமலை சீனிவாசனின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து பள்ளி மாணவ – மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் தமிழினி, நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தி.வ.எழிலரசு, அன்புச்செல்வன் நிர்வாகிகள் தீபா எழிலரசு, ஒன்றிய நிர்வாகிகள் தம்பிவேல், வெங்கடேசன், முருகவேல், தாமரை, மணிவண்ணன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்….

The post கோழியாளம் கிராமத்தில் ரெட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Tags : Redtaimalai Srinivasan ,Kozhiyalam village ,Uttaramerur ,Liberation Tigers Party ,
× RELATED கலைஞர் பிறந்தநாள் நிறைவு...