×

வத்திராயிருப்பு அருகே விசாரணைக்கு சென்றபோது போலீஸ் சீருடையுடன் மது அருந்திய எஸ்எஸ்ஐ: சமூக வலைத்தளங்களில் வைரல்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு எஸ்எஸ்ஐ விசாரணைக்கு சென்றபோது, பொது இடத்தில் சீருடையுடன் அமர்ந்து மது அருந்தும் காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு காவல்நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணிபுரிபவர் கந்தசாமி. இவர், ஒரு புகார் தொடர்பான விசாரணைக்காக நேற்று முன்தினம் கோட்டையூர் சென்றார். அதனை முடித்துவிட்டு திரும்பி வரும்போது, மாத்தூர் செல்லும் விலக்கில், பொது இடத்தில் கழிப்பறை அருகே சீருடையுடன் அமர்ந்து வாழைப்பழம், தண்ணீர் பாட்டிலை வைத்து மது அருந்தியுள்ளார். அவர் மது அருந்துவதை சிலர் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். சீருடையுடன் அவர் மது அருந்தும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, விருதுநகர் மாவட்ட எஸ்பி மனோகரன் உத்தரவின்பேரில், திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் எஸ்எஸ்ஐ கந்தசாமியிடம் விசாரித்து வருகின்றனர்….

The post வத்திராயிருப்பு அருகே விசாரணைக்கு சென்றபோது போலீஸ் சீருடையுடன் மது அருந்திய எஸ்எஸ்ஐ: சமூக வலைத்தளங்களில் வைரல் appeared first on Dinakaran.

Tags : SSI ,Vathirairipu ,Vathirayirupu ,
× RELATED கஞ்சா விற்ற முதியவர் கைது