மும்பை: முன்னாள் உலக அழகியும், இந்திய திரையுலகின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவருமான ஐஸ்வர்யா ராய்க்கு இந்தியில் மட்டுமின்றி தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தமிழில் கடைசி யாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் 2 பாகங்களில் அவர் நடித்திருந்தார். இந்நிலையில், பாலிவுட் முன்னணி நடிகரும், தன்னுடைய கணவருமான அபிஷேக் பச்சனை அவர் வெகுவிரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருவதை அறிந்த அவர், சமீபத்தில் தன்னுடைய திருமண மோதிரத்தைக் காட்டி, அந்த விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனால், சொத்துகள் தொடர்பாக அமிதாப் பச்சன் மனைவி ஜெயாபாதுரிக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே மாமியார், மருமகள் சண்டை நடப்பதாகவும், இதனால் ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் தனியாக வசிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், சினிமா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் அமிதாப் பச்சன் குடும்பத்தினருடன் ஐஸ்வர்யா ராய் கலந்துகொள்வதை தவிர்த்துவிட்டு, ஒரே மகள் ஆராத்யாவை அழைத்துக் கொண்டு வருகிறார் என்பதை சமீபகாலமாக நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பார்க்க முடிந்தது.
இந்நிலையில், நேற்று முன் தினம் அமிதாப் பச்சனின் 82வது பிறந்தநாளில் அவரது ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்தனர். ஆனால், மருமகள் ஐஸ்வர்யா ராய் மட்டும் எதுவும் சொல்லாமல் இருந்த நிலையில், திடீரென்று இரவு 12 மணியளவில் ஒரு பதிவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதில், ஆராத்யா வுடன் அமிதாப் பச்சன் இருக்கும் போட்டோ ஒன்றைப் பதிவிட்டு, தனது மாமனாருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியிருக்கிறார். இவ்வளவு தாமதமாக அவர் பதிவு வெளியிட்டிருப்பது பற்றி நெட்டிசன்கள் விமர்சித்தாலும், கணவர் அபிஷேக் பச்சனுடன் விவாகரத்து, மாமியார் ஜெயா பாதுரியுடன் சண்டை போன்ற சர்ச்சைக்கு அவரது பதிவு முற்றுப்புள்ளி வைத்திருப்ப தாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
The post மாமியாருடன் சொத்து தகராறு: கணவரை பிரிந்தாரா ஐஸ்வர்யா ராய்? பாலிவுட்டில் தொடரும் சர்ச்சை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.