×

கடலூர் அருகே பைக் மீது மோதிய பஸ் டிரான்ஸ்பார்மரில் இடித்து தீப்பற்றி எரிந்தது: 2 பேர் பலி; பயணிகள் தப்பினர்

குறிஞ்சிப்பாடி: பைக் மீது பஸ் மோதியதில் 2 பேர் பலியாயினர். மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் டிரான்ஸ்பார்மர் மீது இடித்ததில் தீப்பிடித்து எரிந்தது. கடலூரில் இருந்து நேற்று இரவு 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் விருத்தாசலம் நோக்கி தனியார் பஸ் சென்றது. குள்ளஞ்சாவடி அடுத்த பெரிய காட்டுசாகை அருகே, இரவு 7.05 மணி அளவில் சென்றபோது பஸ்சின் முன் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து வலது புறமாக சென்றது. அப்போது, அவ்வழியாக சென்ற பைக் மீது மோதி, இழுத்து கொண்டு சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மரில் இடித்து நின்றது. அப்போது உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததும் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. பஸ் நின்றவுடன் பயணிகள் அலறியடித்து குதித்து தப்பி ஓடினார். இதனால் அனைவரும் உயிர் தப்பினர். டிரான்ஸ்பார்மரில் மோதியதும், பஸ் தீப்பிடித்து முற்றிலும் எரிந்தது. பஸ் மோதிய விபத்தில், பைக்கில் சென்ற பச்சையாங்குப்பம் சபரி(27) அதே இடத்தில் உயிரிழந்தார். காயமடைந்த அவரது நண்பர் செந்தில்(37),  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விபத்து நடந்ததும் கடலூர்- சேலம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு குள்ளஞ்சாவடி போலீசார் சென்று போக்குவரத்தை சரி செய்தனர். …

The post கடலூர் அருகே பைக் மீது மோதிய பஸ் டிரான்ஸ்பார்மரில் இடித்து தீப்பற்றி எரிந்தது: 2 பேர் பலி; பயணிகள் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,MARKER ,Dinakaran ,
× RELATED 18ம் தேதிக்கு பிறகு வெளிமாநில பதிவெண்...