×

இலக்கியம்பட்டி ஏரியை சுற்றிலும் நடைபாதையுடன் பூங்கா அமைக்கும் பணி தீவிரம்

தர்மபுரி : தர்மபுரி இலக்கியம்பட்டி ஏரியை சுற்றி நடைபாதையுடன் பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தர்மபுரி ஊராட்சி ஒன்றியம் இலக்கியம்பட்டி ஊராட்சியில் 4.30 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள இலக்கியம்பட்டி ஏரியை கலெக்டர் சாந்தி கடந்த வாரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இலக்கியம்பட்டி ஏரியை சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரை மற்றும் முட்புதர்களை பார்வையிட்ட அவர் உடனடியாக இந்த ஏரியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரியை புனரமைத்து மேம்படுத்தி நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். பொழுதுபோக்கு அம்சங்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் படகு சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்த 2 நாட்களாக ஏரியை சுற்றி தூய்மைபணிகள் தீவிரமாக நடக்கிறது. முட்புதர்கள் மற்றும் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனபால், கணேசன், உதவி பொறியாளர் துரைசாமி, உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஏரியை சுற்றி பார்த்து ஆய்வு செய்தனர். ஏரியை சுற்றி நடக்கும் தூய்மைபணிகளை பார்வையிட்டனர். பின்னர் நடைபாதையுடன் பூங்கா மற்றும் மின்விளக்கு அமைக்கும் பணி துரிதமாக நடக்கிறது. சுற்றுலா பயணிகள் இளைபார்வதற்கு இருக்கை மற்றும் கேட் வசதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு உபகரணங்கள் அமைக்க இடம் தேர்வு செய்தனர். …

The post இலக்கியம்பட்டி ஏரியை சுற்றிலும் நடைபாதையுடன் பூங்கா அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Literary Lake ,Dharmapuri ,Dharmapuri Literary Lake ,Dharmapuri Orratchi ,Dinakaraan ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு