×

பலன் தரும் ஸ்லோகம்((கொடிய துன்பங்கள் நீங்க, தேவியின் திருவருள் கிட்ட...))

த்யானம் காலாப்ரபாம் கடாக்ஷைரரிகுல பயதாம்
மௌளிபத்தேந்து ரேகாம்
சங்கம் சக்ரம் க்ருபாணம் த்ரிசிகமபி கரை
ருத்வ ஹந்தீம் த்ரிநேத்ராம்
ஸிம்ஹஸ்கந்தாதி ரூடாம் திரிபுவன மகிலம்
தேஜஸா பூரயந்தீம்
-த்யாயேத் துர்க்காம் ஜயாக்யாம் த்ரிதசபரிவ்ருதாம்
ஸேவிதாம் ஸித்திகாமைஹி
- ஜெயதுர்க்கா ஸ்லோகம்

பொதுப்பொருள்: தேவர்கள் அனைவரும் கூடி ஜெயதுர்க்கா தேவியைத் துதித்து பேறு பெற்றனர். இத்தேவியின் மந்திரத்திற்கு பிரம்மதேவன் மஹரிஷியாகிறார். அன்னை சிம்மவாஹினியாக காட்சி தருகிறாள். சங்கு, சக்ரம், வாள், திரிசூலம் ஆகிய ஆயுதங்களோடு நான்கு கரங்களாலும் பக்தர்களைக் காத்தருள்கிறாள். அஷ்டமாசித்திகளையும் வேண்டும் பக்தர்களுக்கு அருளும் அன்னை இவள். இத் தேவியின் மந்திரம் ரட்சாகரமானது. இந்த மந்திர பாராயண பலனால் பக்தர்கள் தீவினைகள் நீங்கி இன்புறுகின்றனர். ஜெயதுர்க்காதேவியின் மந்திரத்தில் துர்க்கே துர்க்கே என இருமுறை தேவியின் திருநாமம் வருவதால் எத்தகைய கொடிய துன்பங்களும் பக்தரை விட்டு எளிதில் நீங்கும். இத்தேவியின் அருள் கிட்டிட எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி கிட்டும். விதியை சரியாக்கும் அனுக்கிரகம் செய்யக்கூடிய வழிபாடும் கிடைக்கும். தேவி மஹாத்மியத்தின் 4ம் அத்தியாய பாராயண பலனைத் தருபவளும் இவளே.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?