×

கந்தர்வகோட்டை பகுதியில் எள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஆதனக்கோட்டை பெருங்களூர் பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் பயிர் செய்கின்றனர். பின்னர் எள் செடிகளை அறுவடை செய்து போர் கட்டி அதனை உடைத்து விட்டு காய்கள் காய்ந்தவுடன் சிதறிய எள்களை சேகரித்து வீட்டுக்குத் தேவையான அளவு எடுத்துக்கொண்டு மீதியை விற்பனை செய்து வருகின்றனர்.தற்சமயம் எள் கிலோ ஒன்று ரூ.110 வரை விலை செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். எள் கொள்முதலை பற்றிய விவரத்தை வியாபாரிகளிடம் விசாரித்த போது அவர்கள் கூறுகையில், தரமான எள் கிலோ ரூ.110 வரை கொள்முதல் செய்வதாகவும் எண்ணெய் பிழிவதை கணக்கு பார்த்தல்20 கிலோ தரமான எள்ளை மில்லில் கொடுத்து ஆட்டினால் அதற்கு தரமான பனைவெல்லம் 2 கிலோ சேர்க வேண்டும். 2 கிலோ பனை வெல்லத்தில் விலை ரூ.600 ஆகும்.அறவை கூலி 200 ரூபாய். மொத்த செலவு மூன்று ஆயிரமாகும். எள்ளில் இருந்து கிடைக்கும் எண்ணெய்யில் அளவு 8 லிட்டர் தான் அதிகபட்சமாக கிடைக்கும். 1 லிட்டர் எள் எண்ணெய்யில் அடக்க விலை ரூ.375 ஆகும். ஆனால் வெளிசந்தையில் விலை குறைவாக கிடைப்பது எப்படி என்றும் அதனை அரசு கண்காணிக்க வேண்டும் என வியபாரிகள் கேட்டுகொள்கிறார்கள்….

The post கந்தர்வகோட்டை பகுதியில் எள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kandarvakotta ,Gandarvakotta ,Pudukkotta District ,Puraddy ,Union ,Adanakkota Parangalore ,Dinakaran ,
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி