×
Saravana Stores

சமந்தா நிஜ ஹீரோயின் அலியா பட் சர்ட்டிபிகேட்

ஐதராபாத்: தமிழ் சினிமா மூலம் அறிமுகமாகி பிறகு தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை பிடித்து தற்போது பாலிவுட்டிலும் ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகை சமந்தா. உடல் நிலை சரி இல்லாத காரணத்தினால் சற்று சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது, மீண்டும் சினிமாவில் களம் இறங்கிய சமந்தா நேற்று நடைபெற்ற நடிகை அலியா பட் நடிப்பில் வெளியாக உள்ள ‘ஜிக்ரா’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் ஐதராபாத்தில் கலந்து கொண்டுள்ளார்.

அவரை தொடர்ந்து, சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரிவிக்ரம் கலந்து கொண்டுள்ளார். அப்போது அந்த நிகழ்ச்சியில் சமந்தா குறித்து நடிகை அலியா பட் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ‘சமந்தா படத்தில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் ஒரு நாயகி தான். அவருடன் இணைந்து படத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை உள்ளது. திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நானும் சமந்தாவும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
மேலும், இயக்குனர் திரிவிக்ரம் பேசுகையில், ‘ரஜினிகாந்த் போன்று அனைத்து மொழிகளிலும் புகழ்பெற்ற நடிகையாக சமந்தா திகழ்கிறார்’ என்று பாராட்டியுள்ளார்.

The post சமந்தா நிஜ ஹீரோயின் அலியா பட் சர்ட்டிபிகேட் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Samantha ,Alia Bhatt ,Hyderabad ,Bollywood ,Bhatt ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ரூ.34 கோடி வீடு விவகாரம் நாக சைதன்யாவுக்கு சமந்தா நோட்டீஸ்?