×

இங்கிலாந்து அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா: போரிஸ் ஜான்சனுக்கு மீண்டும் நெருக்கடி

லண்டன்: இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் 4 அமைச்சர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்துள்ளதால், அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் துணை கொறடாவாக இருந்த எம்.பி. கிறிஸ் பின்சர், கடந்த புதன்கிழமை இரவு கேளிக்கை விடுதியில் 2 ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் எம்பி. பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், நிதி அமைச்சர் ரிஷி சுனக், சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவித் தங்கள் பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தனர். இதனால் போரிஸ் அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், அடுத்த சில மணி நேரத்தில் நதீம் சஹாவியை புதிய நிதி அமைச்சராகவும், ஸ்டீவ் பார்க்லே சுகாதார அமைச்சராகவும் நியமித்தார். இந்த நியமனங்களை போரிஸ் செய்த அடுத்த சில மணி நேரத்தில், உயர்கல்வி அமைச்சர் வில் குயின்ஸ், பள்ளிக் கல்வி அமைச்சர் ராபின் வால்கர் ஆகியோர் பதவி விலகினர். மேலும், போக்குவரத்து துறை அமைச்சரின் உதவியாளரும் எம்பி.யுமான லாரா ட்ரோட்டும் பதவியை ராஜினாமா செய்தார். அமைச்சர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவது அவருக்கு மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது….

The post இங்கிலாந்து அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா: போரிஸ் ஜான்சனுக்கு மீண்டும் நெருக்கடி appeared first on Dinakaran.

Tags : UK ,Boris Johnson ,London ,England ,Dinakaran ,
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...