×

பலன் தரும் ஸ்லோகம் (கடன்களிலிருந்தும், கிரகதோஷங்களிலிருந்தும் நிவாரணம் பெற...)

ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீஸம் தைத்யேஸ்வரவிதாரணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
க்ரூரக்ரஹை: பீடிதானாம் பக்தானமபயப்ரதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
        - ருணவிமோசன நரஸிம்ஹ ஸ்தோத்திரம்.

பொதுப் பொருள்: நாராயண பக்தன் பிரகலாதனுக்கு தரிசனம் தந்து அருளியவரே. லட்சுமியின் நாயகனே. அசுரன் இரண்யனை வதம் செய்தவரே, மிகப்பெரிய வீரரே. ஸ்ரீநரசிம்ம மூர்த்தியே, உம்மைத் துதிக்கிறேன். கடன்களிலிருந்தும், சுமைகளிலிலிருந்தும் என்னை விடுவிப்பீராக. கோள் சஞ்சாரத்தால் துன்பங்களை அனுபவிக்கும் பக்தர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்கள் வருத்தத்தை துடைப்பவரே, நரசிம்ம மூர்த்தியே உமக்கு நமஸ்காரம்.ஒவ்வொரு மாத பிரதோஷ வேளைகளிலும் (மாலை 6 மணி), சுவாதி நட்சத்திர தினத்தன்றும், நரசிம்ம ஜெயந்தியன்றும் நரசிம்மரின் படத்தின் முன் நெய் விளக்கேற்றி இத்துதியை பாராயணம் செய்திட நரசிம்மர் திருவருளால் கடன்கள் அடைபடும். நவகிரகங்களினால் ஏற்படும் கெடுபலன்கள் தொலையும்.

Tags : deaths ,
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...