×
Saravana Stores

‘டாடா’ கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ஜெயம் ரவி

சென்னை: ‘அகிலன்’, ‘பிரதர்’ ஆகிய படங்களை தொடர்ந்து 3வது முறையாக ஸ்கிரீன் சீன் மீடியாவுடன் இணைந்து உள்ளார், ஜெயம் ரவி. ‘இருட்டு’, ‘தாராள பிரபு’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘இடியட்’, ‘சாணிக் காயிதம்’, ‘அகிலன்’ உள்பட பல வெற்றிப் படங்களையும், ‘மத்தகம்’ என்ற வெப்தொடரையும் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா, தற்போது ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ என்ற படத்தை தயாரித்துள்ளது.

இந்தநிலையில், சுந்தர் ஆறுமுகம் தயாரிக்கும் புதிய படத்துக்கு தற்காலிகமாக ‘ஜெ ஆர் 34’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை கவின் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘டாடா’ என்ற படத்தை எழுதி இயக்கிய கணேஷ் கே.பாபு எழுதி இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். வரும் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

The post ‘டாடா’ கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ஜெயம் ரவி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ganesh K. Jayam Ravi ,Babu ,Chennai ,Jayam Ravi ,Screen Scene Media ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பூலாம்பட்டிக்கு சுற்றுலா வந்தவர் ஆற்றில் மூழ்கி பலி..!!