×

வாகனம் மோதி மூதாட்டி பலி

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் சத்திரம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் நாகம்மாள்(76). நேற்று முன்தினம் தான் வீட்டில் வளர்க்கும் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். வெகுநேரமாகியும் மாடுகள் வீடு திரும்பவில்லை. இதனால் அவர் மாடுகளை தேடிச்சென்றார். இந்நிலையில், அவர் திருவள்ளூர் – ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையோரம் சென்றபோது திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகம்மாள் பலியானார். புகாரின்படி மணவாள நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

The post வாகனம் மோதி மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Nagammal ,Kadambathur Union Policavakam Sinth Perumal Temple Street ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி