×

பவன் கல்யாண் பெயரை பச்சை குத்திய நடிகை

ஐதராபாத்: பவன் கல்யாண் பெயரை நடிகை அஷு ரெட்டி தனது உடலில் பச்சை குத்திக்கொண்டுள்ளார். தெலுங்கில் பல படங்களில் நடித்திருப்பவர் அஷு ரெட்டி. கவர்ச்சி பாடல்களுக்கு நடனம் ஆடியிருக்கிறார். இவர் திடீரென நடிகர் பவன் கல்யாண் பெயரை ஆங்கிலத்தில் தனது விலா பகுதியில் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார். இது குறித்து அஷு ரெட்டி கூறும்போது, ‘நான் பவன் கல்யாணின் தீவிர ரசிகை. அவரது எல்லா படங்களையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடுவேன். சிறு வயது முதல் அவரது படங்களை பார்த்துதான் வளர்ந்தேன். அவர் மீது இருக்கும் அன்பால்தான் இந்த காரியத்தை செய்தேன். மற்றபடி அவரது கவனத்தை ஈர்க்க வேண்டும், அவரது ரசிகர்களின் ஆதரவை பெற வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை’ என்றார். அஷு ரெட்டி, பவன் கல்யாணின் பெயரை பச்சை குத்தி வெளியிட்ட இந்த புகைப்படம், இணையதளத்தில் வைரலானது. பவன் கல்யாணின் படத்தில் வாய்ப்பு பெறவே இவர் இப்படி செய்திருக்கிறார் என நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்….

The post பவன் கல்யாண் பெயரை பச்சை குத்திய நடிகை appeared first on Dinakaran.

Tags : phavan kalyan ,Hyderabad ,Ashu Reddy ,Bhavan Khalyan ,
× RELATED ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி: கொல்கத்தா...