×

பலன் தரும் ஸ்லோகம் : (கோர்ட் வழக்குகளில் வெற்றி பெற...)

உத்தார்க்க ஸமப்ரபாம் தாடீமீ புஷ்ப ஸன்னிபாம்
ரத்ன கங்கண கேயூர க்ரீடாம் கதஸம்யுக்தாம்
தேவ கந்தர்வ யோகினி ஸ முனி ஸித்தனி ஸேவிதாம்
நமாமி விஜயா நித்யாம் ஸிம்ஹோபரிக்ருதாஸனாம்
விஜயா நித்யா ஸ்லோகம்.

பொதுப்பொருள்:

விஜயா நித்யா அன்னை அதிகாலை சூரியனைப் போல பிரகாசிப்பவள். ஐந்து முகங்கள், பட்டாடை அணிந்து கண்களைக் கவரும் ஒளி பொருந்திய மகுடமும் நெற்றியில் பிறை நிலவும் சூடி தோற்றமளிப்பவள். பலவகையான அணிகலன்களும் அம்பாளுக்கு அழகுக்கு அழகு செய்கின்றன. திருக்கரங்களில் சங்கு, சக்ரம், பாசம், அங்குசம், வாள், கேடயம், வில், அம்பு, மாதுளம்கனி, அல்லி மலரை ஏந்தி வலதுகாலை மடித்து இடதுகாலைத் தொங்கவிட்டு, பாதத்தை தாமரை மலரில் இருத்திய தோற்றத்துடன் பொலிகிறாள். தேவர்கள், கந்தர்வர்கள், யோகினிகள், முனிவர்கள், சித்தர்கள் தொழும் தேவி இவள். சுகாசனத்தில் அமர்ந்துள்ள இந்த அம்பிகையை போரில் வெற்றி பெற தியானம் செய்வது வழக்கம். புலியின் மீது அமர்ந்துள்ள எண்ணற்ற சக்திகள் இவளைச் சுற்றிலும் எப்போதும் இருக்கும். ஆணவம் கொண்டவர்களை அடக்கும் ஆதிசக்தியின் அம்சமாக இத்தாய் விளங்குகிறாள். இத்துதியை கீழ்க்கண்ட திதிகளில் பாராயணம் செய்தால் வழக்குகளில் வெற்றி பெறலாம்.

வழிபட வேண்டிய திதிகள்:

சுக்ல பட்ச துவாதசி, கிருஷ்ண பட்ச சதுர்த்தி.

வழிபடுவதால் உண்டாகும் பலன்கள்:


எந்த வகை வழக்குகளிலும் வெற்றி கிடைக்கும். பல வகையான கலைகளில் தேர்ச்சி கிட்டும்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?