×

அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமான படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பம் : இந்திய விமானப்படை அறிவிப்பு!!

புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமான படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அக்னிபாதை என்ற ராணுவ ஆட்சேர்ப்புத் திட்டத்தை கடந்த 14ம் தேதி ஒன்றிய அரசு அறிவித்தது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ராணுவ வீரர்களுக்கு 4 ஆண்டுகள் பணி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்களை சேர்க்க கடும் எதிர்ப்பு கிளம்பி இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அக்னிபாதை திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி  நாடு முழுவதும் பல்வேறு கட்சியின் சார்பில் போராட்டங்கள் வெடித்தன. ஆனாலும் இந்த திட்டத்தை திரும்பப்பெற முடியாது என அரசு உறுதியாக தெரிவித்தது. அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முப்படைகளும் தொடங்கி உள்ளன.குறிப்பாக அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமான படையில் சேருவதற்கு விண்ணப்பங்கள் கடந்த 24ம் தேதி முதல் பெறப்பட்டன. விமான படையில் சேருவதற்கு முதல் நாளில் 3 ஆயிரத்து 800 பேர் விண்ணப்பித்ததாக விமான படை தெரிவித்தது. இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் சேருவதற்காக தகுதியானவர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 24ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.நேற்று வரை 7.49 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில் வந்த 6,31,528 விண்ணப்பங்களுடன் ஒப்பிடுகையில், இந்த முறை மிக அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது இந்த முறை 7,49,899 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த மாதம் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது….

The post அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமான படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பம் : இந்திய விமானப்படை அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Air ,Indian Air Force ,New Delhi ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இரவு...