×

முண்டியம்பாக்கம் மருத்துவமனை அருகே குண்டும் குழியுமான தார் சாலை நோயாளிகள் அவதி

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள முண்டியம்பாக்கம்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விழுப்புரம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்து தினந்தோறும்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். மருத்துவமனை வளாகத்தில் இருந்து மெயின்ரோட்டுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலை  தற்போது சேதமடைந்துள்ளதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது கொரோனா  தொற்று அதிகரித்து வருவதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின்  எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்….

The post முண்டியம்பாக்கம் மருத்துவமனை அருகே குண்டும் குழியுமான தார் சாலை நோயாளிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Mundiambakkam Hospital ,Vikravandi ,Mundiambakkam Government Medical College Hospital ,Villupuram district ,Villupuram ,
× RELATED விக்கிரவாண்டி அருகே அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான 3 கார்கள்