பொன்னமராவதி அருகே காரையூர் முத்துமாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம்

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் முத்துமாரியம்மன் கோயிலில் தேர் வௌ்ளோட்டம் நடந்தது. காரையூர் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வைகாசி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு காரையூர் ஊர் பொதுமக்கள் சார்பில் முத்து மாரியம்மனுக்கு புதிய தேர் செய்தனர். இந்த தேர் வெல்லோட்டம் செய்ய முடிவு செய்து முக்கிய வீதி வழியாக மேலதாளத்துடன் பக்தர்கள் தேரை இழுத்து சென்று நிலையை அடைந்தனர். இதில் காரையூர் சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

× RELATED கோயிலை உடைத்து கொள்ளை முயற்சி