×

தூத்துக்குடி அருகே மூடியில்லாத தரைத்தள வால்வு குடிநீர் தொட்டி

ஸ்பிக்நகர் : தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வல்லநாடு, வாழவல்லான் ஆற்றில் இருந்து குழாய்கள் அமைத்து தண்ணீர் எடுத்து செல்லப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இதேபோல தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீர் ஆத்தூர், ஆறுமுகமங்கலம் உள்ளிட்ட பகுதியில் இருந்து குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு நீண்ட தூரம் தண்ணீர் கொண்டு செல்லும்போது குழாய்களில் அழுத்தம் காரணமாக வெடிப்பு ஏற்படாமல் இருக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு வால்வுகளின் மூலமாக காற்று வெளியேற்றப்படுகிறது.காற்று வெளியேற்றும் வால்வுகள் உள்ள தொட்டிகள், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளது. இதேபோல் அத்திமரப்பட்டி கீழத்தெருவில் உள்ள தொட்டி சாலையின் நடுவில் அமைந்துள்ளது. இந்த தொட்டி மூடியில்லாத நிலையில் காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் மாணவ -மாணவிகள், பொதுமக்கள், வியாபாரிகள் கவனத்துடன் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எனவே மூடியில்லாத நிலையில் காணப்படும் தொட்டிக்கு மூடி போடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. …

The post தூத்துக்குடி அருகே மூடியில்லாத தரைத்தள வால்வு குடிநீர் தொட்டி appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Spignagar ,Tuticorin district ,Vallanadu ,Vazhavallan river ,Dinakaran ,
× RELATED இன்னொரு முட்டை கொடுக்க மறுத்த சமையல்...