×

கொள்ளிடம் அருகே வடரங்கத்தில் இடிந்து விழும் நிலையில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்-சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் உள்ளது.இது கட்டப்பட்டு 30 வருடங்களுக்கும் மேலாகிறது.இந்த கட்டிடம் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கட்டிடத்தின் மேற்கூறையின் உள்பகுதியில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. மீதமுள்ள சிமெண்ட் காரைகளும் எந்தநேரமும் பெயர்ந்துவிழும் நிலையில் உள்ளது.இப்படி சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த கட்டிடத்தில்தான் ஊராட்சி மன்ற அலுவலகம் இயங்கி வருகிறது.மழை பெய்யும் போதெல்லாம் மேற்கூறையின் வழியாக தண்ணீர் உள்ளே கசிந்து வருகிறது. இதனால் இக் கட்டிடத்துக்குள் வைக்கப்பட்டுள்ள ஊராட்சிக்கு சொந்தமான அனைத்து வகையான பதிவேடுகள் தண்ணீரில் நனைந்து பாதிக்கும் அவல நிலை உள்ளது. எந்த நேரமும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள வடரங்கம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்றிவிட்டு புதியதாக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் கூறு கையில், வடரங்கம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் பழுதானதால், அலுவலகம் தற்காலிகமாக வேறு கட்டிடத்தில் இயங்கச் செய்யவும், அதனை இடித்து அகற்றிவிட்டு புதியதாக கட்டிடம் விரைவில் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்….

The post கொள்ளிடம் அருகே வடரங்கத்தில் இடிந்து விழும் நிலையில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்-சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vadarangam ,Kollidam ,Kollidam, Mayiladuthurai district ,
× RELATED கொள்ளிடம் அருகே கடைவீதியில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது