×

திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில் சித்திரை திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாகர்கோவில்: திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. காலை 5 மணிக்கு கணபதிஹோமம், 9 மணிக்கு திருக்கொடியேற்றம் நடந்தது. மாலை 6.30 மணிக்கு பக்தி பஜனை, இரவு 8.30 மணிக்கு சாமி புஷ்பக வாகனத்தில் பவனி வருதல் ஆகியவை நடந்தது. இன்று(11ம் தேதி) காலை 7 மணிக்கும், இரவு 8.30 மணிக்கு சாமி பவனி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. 12ம் தேதி காலை 7 மணிக்கு சாமி சிங்க வாகனத்தில் பவனி வருதல், மாலை 6 மணிக்கு சமயசொற்பொழிவு, இரவு 8 மணிக்குசாமி ஹனுமான் வாகனத்தில் பவனி வருதல் ஆகியவை நடக்கிறது.

13ம் தேதி மாலை 6.30 மணிக்கு பக்தி இன்னிசை, இரவு 10 மணிக்கு சாமி ஆதிசேஷ வாகனத்தில் பவனி வருதல் ஆகியவை நடக்கிறது. 14ம் தேதி இரவு 9 மணிக்கு சாமி கருட ரிஷப வாகனத்தில் பவனி வருதல், 15ம் தேதி காலை 7 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 10 மணிக்கு சாமி யானை வாகனத்தில் பவனி வருதல் ஆகியவை நடக்கிறது. 17ம் தேதி இரவு 7 மணிக்கு நடராஜ மூர்த்தி திருவீதி உலா நடக்கிறது. 9ம் நாளான 18ம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு 10 மணிக்கு சாமி கருட ரிஷப வாகனத்தில் பவனி வருதல் ஆகியவை நடக்கிறது. 19ம் தேதி காலை சாமி ஆறாட்டுக்கு கருட வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

Tags : Tirupathi Saraswamy Temple Celebrations ,
× RELATED சுந்தர வேடம்