×

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் கோயிலில் சித்திரை திருவிழா

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரில் புகழ்பெற்ற பிறவிமருந்தீசர் கோயில் (பெரிய கோயில்) சித்திரை திருவிழா விழாவில் சுப்பிரமணியர் சுவாமி மயில் வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கிநடைபெற்று வருகிறது.ஒவ்வொரு நாளும் காலை, இரவு நேரங்களில் உபயதாரர் சார்பில் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம்  பிறவி மருந்தீஸ்வர் , பெரியநாயகிஅம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது . பின்னர் சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் மயில் வாகனத்தில் வீதியுலா  நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள்  கலந்து கொண்டனர்.

Tags : festival ,Tirathiripondi Birthplace ,
× RELATED பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில்...