×

மாரியம்மன் கோயில் பங்குனி தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

தரங்கம்பாடி: நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி தேரோட்டம் நேற்று நடந்தது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தரங்கம்பாடி அருகே உள்ள ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயில் பிரார்த்தனை தலமாகவும், பராசக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு பங்குனி திருவிழா கடந்த 31ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஒரு மாதம் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு விழாக்கள் நடைபெறுகின்றன. நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். தேரில் மாரியம்மன் அலங்கார தோற்றத்துடன் காட்சியளித்தார். இதை தொடர்ந்து 12ம் தேதி வௌ்ளிக்கிழமை தெப்பத் திருவிழாவும், 14ம் தேதி உதிரவாய் துடைப்பு உற்சவமும், 21ம் தேதி மஞ்சள் நீர் உற்சவமும் 26ம் தேதி வௌ்ளிக்கிழமை ஏகதின லட்சார்ச்சனையும் நடைபெற்று 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடையாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அன்பரசன், பரம்பரை நிர்வாக அறங்காவலர் லெட்சுமிநாராயணன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Mariamman Temple Mar Thorayam ,devotees ,
× RELATED திருப்பதி கோயிலில் ரூ.4.23 கோடி உண்டியல் காணிக்கை