×

முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கும் வைபவம்

முள்ளிக்குளம்: முள்ளிக்குளம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் பூக்குழி இறங்கும் வைபவம் நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
முள்ளிக்குளம் கீழத்தெரு யாதவர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 6ம் தேதி இரவு 9 மணிக்கு அம்மன் தீச்சட்டி வீதியுலா நடந்தது. தொடர்ந்து பூக்குழி இறங்கும் வைபவம் நேற்று (7ம் தேதி) நடந்தது. இதையொட்டி காலை 8 மணிக்கு அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது.

மாலை 5.30 மணிக்கு சிங்க வாகனத்தில் அம்மன் வீதியுலாவை தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு குருசாமி நாராயணனும், அதனைத் தொடர்ந்து மற்ற பக்தர்களும் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையொட்டி இரவு 8 மணிக்கு இன்னிசை கச்சேரி நடந்தது. இன்று (8ம் தேதி) மாலை 5 மணிக்கு உருவம் எடுத்தலும் தொடர்ந்து இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.  நாளை மாலை 5 மணிக்கு பொங்கல் அழைப்பு, இரவு 7 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம், இரவு 11 மணிக்கு ஆயிரம் கண் பானை எடுத்தல், மறுநாள் அதிகாலை 1 மணிக்கு அம்மன் சப்பரத்தில் வீதியுலா நடக்கிறது.

Tags : flowering ceremony ,Muthuramaniyanam temple ,
× RELATED மக்கள் வலியுறுத்தல் திருவப்பூர்...