×

ஒகேனக்கல் வனப்பகுதியில் மக்னா யானை சுட்டுக் கொலை: வனத்துறையினர் தீவிர விசாரணை

பென்னாகரம்: ஒகேனக்கல் வனப்பகுதியில் மக்னா யானையை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்து ஒகேனக்கல் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றி திரிகின்றன. இந்நிலையில், கூட்டு குடிநீர் திட்ட கணவாய் வனப்பகுதியில், 5 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள், ஒரு யானையை சுட்டுக் கொன்று விட்டு, தப்பியோடி உள்ளனர். நேற்று வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது, துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, அப்பகுதிக்கு வனத்துறையினர் சென்று பார்த்தபோது, யானை இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து, வனத்துறையினர் அங்கேயே பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனையில் யானை சுட்டுக்கொல்லப்பட்டது தெரியவந்தது. சுட்டுக்கொல்லப்பட்ட யானை 42 வயது மதிக்கத்தக்க மக்னா யானை என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து யானையை சுட்டுக் கொன்றவர்கள் குறித்து, வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post ஒகேனக்கல் வனப்பகுதியில் மக்னா யானை சுட்டுக் கொலை: வனத்துறையினர் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Okanagan forest ,Pennagaram ,Dharmapuri district ,department ,Dinakaran ,
× RELATED கோடுப்பட்டி வனப்பகுதியில் தண்ணீர் குடித்து குதூகலிக்கும் யானைகள்