×

திருவில்லி. பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் நேற்று பூக்குழி திருவிழா நடந்தது. இதில்  ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி விழா  மார்ச் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பெரிய மாரியம்மன்  பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளி சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தார்.  தினமும் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி  திருவிழா நேற்று நடைபெற்றது.

முன்னதாக, பக்தர்கள் பூக்குழி இறங்குவதற்கு முன் பெரிய மாரியம்மனை தரிசனம் செய்துவிட்டு நான்கு ரத வீதி வழியாக வந்தனர். நான்கு ரதவீதிகளிலும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பூக்குழி  இறங்கும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள்  பூக்குழி இறங்கினர். 13 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் பூக்குழி இறங்கி  தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். நெரிசலின்றி பூக்குழி இறங்கும்  வகையில் பேரி கார்டுகள் அமைக்கப்பட்டு இருந்தன. டிஎஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர்  பாலாஜி ஆகியோர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டனர்.

அவசர உதவிக்காக அரசு மருத்துவமனையின் சார்பில் 108 ஆம்புலன்ஸ் வசதிகளும், தீயணைப்பு துறையினரும் தயார் நிலையில் இருந்தனர்.கோயில் தக்கார் இளங்கோவன், நிர்வாக அதிகாரி சுந்தர்ராஜ் தலைமையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பூக்குழி திருவிழாவை முன்னிட்டு நகரின் பெரும்பாலான பள்ளிகள் மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இன்று தேரோட்டம் நடைபெற உள்ளது  குறிப்பிடத்தக்கது.

Tags : Tiruvilli ,Flower festival ,Mariamman ,
× RELATED அரசுடமை, தனியார் வங்கி ஏடிஎம்களில்...