×

அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா தொடக்கம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட்டுக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 15 நாட்கள் நடைபெறும். நாள்தோறும் மண்டகப்படிதாரர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 8ம் நாள் திருவிழாவாக 9ம் தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுதலும், 9ம் நாள் திருவிழாவாக 10ம் தேதி அக்கினிசட்டி மற்றும் பிரார்த்தனை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தினந்தோறும் கோயில் மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள்  நடைபெறும். பொங்கல் விழாவை முன்னிட்டு பொருட்காட்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட் தலைவர் சுதாகர் தலைமையில் உற்சவ கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

Tags : festival ,Pongal ,Aruppukkottai Muthuramaniyanam ,
× RELATED கமுதி கோயில் திருவிழாவில் உடலில் சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன்