×

தொழில்புரிய ஏதுவான மாநிலங்களில் தமிழகம் 3வது இடத்துக்கு முன்னேற்றம்: அமைச்சர், அதிகாரிகளுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: தொழில் புரிய ஏதுவான மாநிலங்களுக்கான தரவரிசையில் தமிழ்நாடு 3வது இடத்தை பெற்றதற்காக தொழில் துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: தொழில் புரிய ஏதுவான மாநிலங்களுக்கான தரவரிசையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுள் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது. புள்ளிகள் அடிப்படையில் பார்த்தால், 14வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு தாவியிருக்கிறோம். தொடர்ச்சியான திட்டமிட்ட நடவடிக்கைகளால் முதலீடுகளுக்கான முக்கிய மையமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ள தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post தொழில்புரிய ஏதுவான மாநிலங்களில் தமிழகம் 3வது இடத்துக்கு முன்னேற்றம்: அமைச்சர், அதிகாரிகளுக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil ,Nadu ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...