×

மறைமலைநகர் அருகே புதிதாக கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: நகராட்சி ஆணையரிடம் மனு

செங்கல்பட்டு: மறைமலைநகர் அருகே புதிதாக கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி ஆணையரிடம் மனு வழங்கினர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கூடலூர் கிராமத்தில் ஏரி உள்ளது. இங்கு, நகராட்சியால் ஏற்கனவே ஏரியில் 2 மிகப்பெரிய கிணறுகள் தோண்டப்பட்டு அந்த கிணற்று தண்ணீரை கூடலூர் பகுதியை தவிர்த்து மற்ற பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, கூடலூர் முஸ்லீம் சுடுகாட்டின் அருகில் நகராட்சி மூலம் டெண்டர் விடப்பட்டு பெரிய கிணறு ஒன்று புதியதாக தோண்டப்படுகிறது. மறைமலைநகர் நகராட்சி நிர்வாகம் கூடலூர் கிராமத்தில் வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தராமல் மக்கள் பாதிக்கக்கூடிய செயல்களை மட்டுமே தொடர்ந்து செய்து வருகிறது. ஏற்கனவே, மிகப்பெரிய இரண்டு கிணறுகள் இருந்தும் அதை பராமரிக்காமல் விட்டுவிட்டு அதிக செலவில் புதிய கிணறு அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் புதியதாக அமைக்கவுள்ள கிணற்றினால் எங்களுக்கு எந்தவித பயனுமில்லை. அதனால், புதிய கிணறு அமைக்கும் திட்டத்தை கைவிட்டு இந்த கூடலூர் ஏரியை தூர்வாரி ஏற்கனவே உள்ள பழைய இரண்டு கிணறுகளையும் புனரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கூடலூர் பகுதி மக்கள் நகராட்சி ஆணையர்லட்சுமியிடம்  மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆணையர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக உறுதியளித்தார்….

The post மறைமலைநகர் அருகே புதிதாக கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: நகராட்சி ஆணையரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Kiramalai Nagar ,Chengalpattu ,Kiramalainagar ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு படாளம் அருகே கார் மீது...