×

மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை ஆழியார் கவி அருவியில் வெள்ளப்பெருக்கு

ஆனைமலை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் கவியருவி கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று. இங்கு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவி கொரோனா மற்றும் வறட்சி காரணமாக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டு, இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், கவியருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. வறட்சி காரணமாக தண்ணீர் இன்றி காணப்பட்ட அருவியில், தண்ணீர் வரத் தொடங்கியுள்ளதால், காற்று வெள்ளம் குறைந்தவுடன் அருவி மீண்டும் திறக்கப்படும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர். இதனிடையே, நேற்று மதியம் முதல் கனமழை பெய்ததால் பொள்ளாச்சியை அடுத்துள்ள அங்கலகுறிச்சி கோபால்சாமி மலை நீர் பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோபால்சாமி மலை தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி மலை முகடுகளில் இருந்து அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கோபால்சாமி மலையிலிருந்து அருகில் தண்ணீர் கொட்டும் காட்சியை அந்த வழியாக ஆழியார் செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், வீடியோ பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்….

The post மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை ஆழியார் கவி அருவியில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Tags : Bhayar Kavi ,Bhayar Kavaiyaruvi Cove ,Pollachi ,West Continuing Mountains ,Bhayar Kwi ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் இலவச...