×

அரசு பள்ளி மாணவர்களுக்கு நிதி மேலாண்மை பயிற்சி

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், வெண்மணம்புதுர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி  ஜான் வர்கீஸின் வழிகாட்டுதலின் படி நிதி மேலாண்மை கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா தலைமை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் எஸ்.பாண்டியன் பயிற்சி ஒருங்கிணைப்பு செய்திருந்தார். இதில் பாரத வங்கி மேலாளர் விக்னேஷ் பள்ளி மாணவர்களுக்கு நிதி, பங்கு சந்தை முதலீடு, பணம் சேமிப்பு கடன் மற்றும் ஓய்வூதியம் குறித்து பல்வேறு வகையான முறையில் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். மாணவர்களுக்கு அக்கவுண்ட் தொடங்கி வங்கி கணக்கில் பணம் செலுத்தும் வகையில் விண்ணப்பம் கொடுத்து பூர்த்தி செய்யும் வகையில் ஆலோசனை வழங்கப்பட்டது.  மேலும், வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன….

The post அரசு பள்ளி மாணவர்களுக்கு நிதி மேலாண்மை பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Alfie John ,Thiruvallur District ,Kadampatur Union ,Venmanambuthur Government High School ,
× RELATED திருவள்ளூர் மாவட்ட எல்லை, குடோனில்...