பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஆண்டி சுவாமிக்கு பக்தர்கள் காவடி

மேலூர்: மேலூர் அருகே கம்பூரில் உள்ள ஆண்டிச்சாமி கோயில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று பக்தர்கள் காவடி எடுத்து மலை மீது ஏறி முருகனை தரிசனம் செய்தனர். மேலூர் அருகே கம்பூர் கருங்குட்டு பகுதியில் உள்ள கருமலை ஆண்டிசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி, பால்குடம் ஏந்தி மலை மீதுள்ள முருகனை தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் மேலூர், தும்பைப்பட்டி, கம்பூர், கருங்காலக்குடி உட்பட அப்பகுதியை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் இதில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினரும், பொது மக்களும் செய்திருந்தனர்.

Related Stories:

>