×

கீழவைப்பார், சிப்பிகுளம் கடற்பகுதியில் மேக்காற்று மீன்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் கரை திரும்பும் மீனவர்கள்

குளத்தூர்: கீழவைப்பார், சிப்பிகுளம் கடற்பகுதியில் மந்தமான மேக்காற்று காரணமாக மீன்கள் இல்லாமல் வெறுங்கையுடன் மீனவர்கள் திரும்பினர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர்  அருகே உள்ள கீழவைப்பார், சிப்பிகுளம் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக  மேக்காற்று மந்தமாக வீசி வருகிறது. இதனால் கடலுக்குள் சென்ற நாட்டுப்படகு  மீனவர்கள் மீன்பாடின்றி வெறும் வலையுடனே ஏமாற்றத்துடன் கரை  திரும்பினர். ஒரு சில மீனவர்கள் வலையில் ஊளி, கட்டா, முறல் போன்ற  குறைந்த அளவிலான மீன்களே வரத்திருந்தது. குறைவான மீன்கள் வரத்திருந்த  போதிலும் கிடைக்கின்ற மீன்களை ஏலம் எடுத்தே தீர வேண்டுமென சில்லறை மீன்  வியாபாரிகளிடையே போட்டி காணப்பட்டது. இதில் பால் ஊளி மீன் கிலோ ரூ.500ல் இருந்து 600வரை ஏலம் போனது. கட்டா ரூ.150க்கும், முறல் ரூ.350க்கும்  விற்பனையானது. மீனவர்கள் கூறுகையில், ‘கடந்த சில  வாரங்களாகவே கடற்பகுதியில் கச்சாங்காற்று இல்லாமல் மேக்காற்று வீசி வருகிறது. அதுவும் மந்தமாக இருப்பதால் கடல் பகுதியில் நீரோட்டம் தெளிவாக உள்ளது.  இதனால் மீனவர்கள் விரிக்கின்ற வலையில் மீன்கள் சிக்காமல் ஆழ் கடலுக்குள்  சென்று விடுகிறது. கடலுக்குள் ஒரு நாள் சென்று வர ரூ.6 ஆயிரம் வீதம்  டீசலுக்கு செலவழித்தும் மீன்பாடுகள் மந்தமாக இருப்பதால் வரவுகள் இன்றி  செலவுகளே மீனவர்களுக்கு மிச்சமாக உள்ளது. தற்போது பள்ளிகள்  திறக்கப்பட்டுள்தால் குழந்தைகளுக்கான பள்ளி கட்டண செலவு, வீட்டுச் செலவு  பார்ப்பதற்குள் போதும் போதும் என ஆகிவிடுகிறது. வருகின்ற நாட்களில்  வீசுகின்ற காற்றை பொருத்தே மீன்பாடுகளின் வரத்து தெரிய வரும்’, என்றனர்….

The post கீழவைப்பார், சிப்பிகுளம் கடற்பகுதியில் மேக்காற்று மீன்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் கரை திரும்பும் மீனவர்கள் appeared first on Dinakaran.

Tags : Oppigulam Sea ,Thoothukudi District Gluttur ,Oyppekulam ,Dinakaran ,
× RELATED வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ...