×

க.காதலியுடன் சந்திப்பை நிறுத்தாத நண்பர் சரமாரி குத்திக்கொலை; கத்தியுடன் டிரைவர் போலீசில் சரண்

திருச்சி: திருச்சியில் கள்ளக்காதலியுடன் சந்திப்பை நிறுத்தாத, நண்பரை கத்தியால் குத்திக்கொலை செய்த டிரைவர் போலீசில் சரணடைந்தார். திருச்சி திருவெறும்பூர் கக்கன் காலனியை சேர்ந்தவர் அசோகன். இவரது மகன் சதீஷ்(எ)சக்திகுமார்(34). வேன் டிரைவர். இவரது மனைவி விவாகரத்து பெற்று  3 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். இவரது நண்பர் திருவெறும்பூர் காந்திநகர் அருகே சுருளி கோவில் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி(32). கார் டிரைவர். திருமணமாகாதவர். இவருக்கு சதீஷ் வீட்டருகே வசிக்கும் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் அவர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து சென்றார். இந்நிலையில் அந்த பெண்ணுடன் சதீசுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணின் வீட்டிற்கு முத்துபாண்டி வருவது பிடிக்காத சதீஷ், அந்த பெண்ணின் தொடர்பை விட்டுவிடும்படி முத்துப்பாண்டியை கண்டித்துள்ளார். இனியும் நீ அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்தால், அந்த பெண்ணின் சகோதரர்களிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டியுள்ளார். ஆனாலும் அவர் அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து சென்றார். வழக்கம்போல் முத்துப்பாண்டி நேற்று நள்ளிரவில் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றார். இதை தனது வீட்டு வாசலில் நின்று பார்த்த சதீஷ், முத்துப்பாண்டியை அழைத்து, இங்கு வராதே என்று எச்சரித்தேன். ஆனால் நீ கேட்கவில்லை. இதனால் அந்த பெண்ணின் அண்ணன்களிடம் சொல்லிவிட்டேன். அவர்கள் வந்துவிடுவார்கள். இனி நீ இங்கு வரமுடியாது என கூறியுள்ளார். இதனால் பயத்தில் முத்துப்பாண்டி, சதீஷ் காலில் விழுந்து தடுக்கும்படி கெஞ்சியுள்ளார். ஆனாலும் சதீஷ் கேட்கவில்லை. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த முத்துபாண்டி திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீசை சரமாரி குத்தினார். இதில் படுகாயமடைந்த சதீஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்தார்.  இதையடுத்து முத்துபாண்டி ரத்த கறை கத்தியுடன் திருவெறும்பூர் போலீசில் சரணடைந்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோரனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து முத்துபாண்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்….

The post க.காதலியுடன் சந்திப்பை நிறுத்தாத நண்பர் சரமாரி குத்திக்கொலை; கத்தியுடன் டிரைவர் போலீசில் சரண் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy Tiruverumpur Kakan… ,K. Kathali ,Saran ,
× RELATED திருச்சியில் சோகம் கொள்ளிடம் தடுப்பணையில் குளித்த மாணவன் பலி