×

மானாமதுரை பகுதியில் உள்ள கண்மாய், குளங்களை தூர்வார கோரிக்கை

மானாமதுரை: மழைக்காலம் துவங்கும் முன்பு மானாமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட மானாமதுரை கீழமேல்குடி கிராமங்களில் வரத்துக்கால்வாய்களை தூர்வாரவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பைபாஸ்ரோட்டில் உள்ளது மானாமதுரை கண்மாய். இந்த கண்மாய் மூலம் இருநூறுக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் சாகுபடி நடந்து வந்தது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக வரத்துக்கால்வாய்களை முறையாக தூர்வாராததால், மானாமதுரை கணமாய்க்கு தண்ணீர் செல்லும் வரத்துக்கால்வாய்களில் கருவேலமரங்கள் வளர்ந்து, கண்மாய்க்கு நீர்செல்வது குறைந்துவிட்டது. கண்மாய் உள்வாய் பகுதிகளில் பெருகும் மழைநீரையும் கண்மாய்களின் உள்ளே உள்ள கருவேலமரங்கள் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் விவசாய பரப்பளவு குறைந்து விட்டது. இது குறித்து மானாமதுரை பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘மானாமதுரை, கீழமேல்குடி கண்மாய்க்கு வைகை ஆற்றுப்பகுதியில் இருந்து வரும் நீரை, வரத்துகால்வாயில் வளர்ந்துள்ள கருவேலமரங்கள் தடுக்கின்றன. இதனால் கண்மாய்க்கு தண்ணீர்வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. எனவே மழைக்காலம் துவங்கும்முன் வரத்துக்கால்வாய்களை தூர்வாரவேண்டும்’’ என்றனர்….

The post மானாமதுரை பகுதியில் உள்ள கண்மாய், குளங்களை தூர்வார கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kanamai ,Manamadurai ,Dirvara ,Manamadurai Union ,Sivagangai ,Kanmai ,
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...