×

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற எதிர்ப்பு: வியாபாரிகள் திடீர் சாலை மறியல்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் ஆக்கிரமிப்பு கடைகளை எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவொற்றியூர் மண்டலத்துக்குட்பட்ட எண்ணூர் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலையோரம் ஏராளமான காய்கறி, பழம், பூ போன்ற கடைகள் உள்ளன. இவற்றில் பல கடைகள் போக்குவரத்திற்கு இடையூராக ஆக்கிரமித்து கடைகளை கட்டி இருப்பதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை பொக்லைன் இயந்திரம் மூலம் கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், எண்ணூரில் உள்ள அனைத்து வியாபாரிகளும் கடைகளையும் மூடி விட்டு முன்அறிவிப்பு இல்லாமல் கடைகளை அகற்ற கூடாது என்று கூறி மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்தத கே.பி.சங்கர் எம்எல்ஏ, வார்டு கவுன்சிலர் கோமதி சந்தோஷ் ஆகியோர் விரைந்து வந்து அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் கடைகளை நோட்டீஸ் வழங்கி கணக்கீடு செய்து வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முறையாக எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதால் போராட்டத்தை கைவிட்டு வியாபாரிகள் கலைந்து சென்றனர். இதனால் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது….

The post ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற எதிர்ப்பு: வியாபாரிகள் திடீர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Traders ,Ennoor Kathivakkam highway ,Thiruvotiyur ,Dinakaran ,
× RELATED குரு பெயர்ச்சியை முன்னிட்டு...