×

ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பங்குனி உத்திர திருவிழா : கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஆரல்வாய்மொழி: ஆரல்வாய்மொழி வடக்கூர் பரகோடி கண்டன் சாஸ்தா  மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 23ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. விழாவாவை முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. 10.30 மணிக்கு மேல் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை கோயில் மேல்சாந்திகள் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் மற்றும் கிருஷ்ணன்பட்டர் ஆகியோர் செய்தனர். இதில் இணை ஆணையர் அன்புமணி மற்றும் தேவசம் கண்காணிப்பாளர் ஆனந்தன், ஸ்ரீகாரியம் கண்ணதாசன் மற்றும் பக்த சேவா சங்க தலைவர் முத்துகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

2ம் திருவிழாவான இன்று (15ம் தேதி) காலை 5.30 மணி மற்றும் இரவு 10 மணிக்கு சாஸ்தாவும், அம்பாளும் வாகனத்தில் பவனி வருதல், சிறப்பு அபிஷேகங்கள், இரவு 7 மணிக்கு இன்னிசை ஆகியவை நடக்கிறது. 3ம் திருவிழாவான 16ம் தேதி காலை 5.30 மற்றும் இரவு 10 மணிக்கு சாஸ்தா, அம்பாள் பவனி வருதல், 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு கலாச்சார இசை நிகழ்ச்சி நடக்கிறது. 8ம் திருவிழாவான 21ம் தேதி  காலை 5 மணிக்கு நடராஜர், சிதம்பரேஸ்வரர் பவனி வரும் நிகழ்ச்சி, காலை 8 மணிக்கு சாஸ்தாவும், அம்பாளும் பவனி நிகழ்ச்சி, இரவு 12 மணிக்கு பரிவேட்டைக்கு சாஸ்தா குதிரை வாகனத்திலும், அம்பாள் கிளி மற்றும் அன்ன வாகனத்திலும் பவனி வருதல் நடைபெறுகிறது.

9ம் திருவிழா அன்று காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 11 மணிக்கு மாடன் தம்புரான் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், மாலை 5 மணிக்கு தற்காப்பு கலை பயிர்ச்சி பள்ளி வழங்கும் களரி மற்றும் சிலம்பம் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. இதனை தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தொடங்கி வைக்கிறார். 10ம் திருவிழாவான 23ம் தேதி  காலை 8 மற்றும் இரவு 8 மணிக்கு சுவாமியும் அம்பாளும், சாஸ்தா, அம்பாளும் ஆறாட்டுக்கு எழுந்தருளல், மாலை 7 மணிக்கு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை பக்த சேவா சங்க தலைவர் முத்துகுமார், துணை தலைவர்கள் இசக்கியப்பன், விநாயகம், செயலாளர் பெருமாள், துணைச் செயலாளர்கள் நடராஜன், தம்புரான் குட்டி, பொருளாளர் ராக்கோடியான் மற்றும் கவுரவ ஆலோசகர்கள் ஆறுமுகம் பிள்ளை, ஈஸ்வர பிள்ளை, கணபதியா பிள்ளை மற்றும் உறுப்பினர்கள் முத்துராமன், சங்கரலிங்கம், தாணு பிள்ளை (எ)கிட்டு, ஆனையப்பன், பிச்சை, என்.ஆர் சதிஷ் மற்றும் உறுப்பினர்கள், கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags : Arulmuviliyam Meenakshi Sundareswarar Temple Mar Uthiram Festival ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?