சென்னை: முழுக்க முழுக்க ஒரு மலையாள திரைப்படக்குழுவினர் தமிழின் மீது அதிக நம்பிக்கை வைத்து உருவாக்கி இருக்கும் படம், ‘சேவகர்’. இது ஒரு அரசியல் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. ‘சேவகர்’ படத்தில் பிரஜின், ஷகானா, போஸ் வெங்கட், ‘ஆடுகளம்’ நரேன், மதுரை சரவணன், உடுமலை ராஜேஷ், ஹீமா சங்கரி நடித்துள்ளனர்.
இதை சந்தோஷ் கோபிநாத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ஆர்.டி.மோகன் இசை அமைத்துள்ளார். பிரதீப் நாயர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சில்வர் மூவிஸ் இண்டர்நேஷனல் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரித்துள்ளார். அவருடன் சுனில் குமார் பி.ஜி., இயக்குனர் சந்தோஷ் கோபிநாத் ஆகியோர் இணைந்துள்ளனர்.
நாட்டில் எங்கு அநியாயம், அக்கிரமம் நடந்தாலும் துணிந்து நின்று தட்டிக்கேட்கும் ஒருவராக கதாநாயகன் பிரஜின் நடிக்கிறார். அவருக்கும், அரசியல்வாதியான ஆடுகளம் நரேனுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதை தொடர்ந்து பிரஜின் சிறையில் அடைக்கப்படுகிறார். பிறகு நடப்பதை படம் விறுவிறுப்பாக சொல்கிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.
The post அரசியல் திரில்லர் கதை சேவகர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.