×

பண்ணாரி அம்மன் திருவீதி உலா

சத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா மார்ச் 18, 19ம் தேதிகளில் நடக்கிறது.இக் கோயில் திருவிழா கடந்த 4ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா சுற்றுவட்டார கிராமங்களில் நடந்து வருகிறது.  நேற்றுமுன்தினம் இரவு அம்மன் சப்பரம் சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயிலை வந்தடைந்தது. நேற்று வடக்குப்பேட்டை, கடைவீதி பகுதிகளில் திருவீதி உலா நடந்தது.அன்று இரவு வேணுகோபாலசாமி கோயிலை சென்றடைந்தது.

இன்று ரங்கசமுத்திரம், எஸ்ஆர்டி கார்னர், திம்மையன்புதூர், கோட்டுவீராம்பாளையம் பகுதிகளில் திருவீதி உலா நடக்கிறது. நாளை கோம்புபள்ளம், பட்டவர்த்தி அய்யம்பாளையம், புதுவடவள்ளி, புதுக்குய்யனூர், பசுவபாளையம், புதுபீர்கடவு, பட்டரமங்கலம், ராஜன்நகர் கிராமங்களில் திருவீதி உலா நடக்கிறது. நாளை இரவு 12 மணிக்கு அம்மன் சப்பரம் பண்ணாரி கோயிலை சென்றடைந்தபின் கோயில் முன்பு நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Tags : Pannari Amman Thiruvaiti Tour ,
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!