×

மாமல்லபுரம் அருகே வடநெம்மேலியில் முதலை பண்ணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலியில் முதலை பண்ணை உள்ளது. நாட்டில் உள்ள பல்வேறு முதலை வகைகளான அமெரிக்காவில் உள்ள அலிகேட்டர், நன்னீர் முதலைகள், நீல வாயுடைய முதலைகள், சதுப்பு நிலத்தில் வாழும் முதலைகள், உப்பு நீரில் வாழும் முதலைகள் உள்ளிட்ட அரியவகை முதலைகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், அமேசான் மற்றும் ஆப்பிக்கா காடுகளில் உள்ள நீர் நிலைகளில் வாழ்ந்து, மனிதர்களை அப்படியே விழுங்கும் மிகப் பெரிய ராட்சத முதலைகளும் இங்குள்ளது. இந்நிலையில், நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். பின்னர் முதலைகளை சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது, சுற்றுலாப் பயணிகள் முதலைகள் வெளியே வராமல் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலிகள்பார்த்து ரசித்தனர். ஒருசில, சுற்றுலாப் பயணிகள் கம்பி வேலிக்கு அருகே சென்றபோது முதலைகள் பயணிகளை நோக்கி வந்தது. அப்போது, அங்கிருந்த பயணிகள் பயந்து ஓடியதை காண முடிந்தது. இதேப்போல், மாமல்லபுரம் அடுத்த சாலவான்குப்பத்தில் உள்ள புலிக்குகை பகுதிக்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்….

The post மாமல்லபுரம் அருகே வடநெம்மேலியில் முதலை பண்ணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Crocodile Ranch ,Vadanemallapuram ,Mamallapuram ,United States ,Crocodile ,Ranch ,Varnemeli ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரை பகுதிக்கு வரும்...