×

குடவாசல்- நன்னிலம் சாலையில் வலுவிழந்து நிற்கும் பழமையான புளியமரத்தால் விபத்து அபாயம்-உடனடியாக அகற்ற கோரிக்கை

வலங்கைமான் : குடவாசல் பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகரின் அருகே குடவாசல்- நன்னிலம் சாலையில் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ள வலுவிழந்துபோன பழமையான புளிய மரத்தை அகற்ற அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குடவாசல் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் எதிர்வரும் மழை காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலை ஓரங்களில் உள்ள குப்பைகள் மற்றும் மழைநீர் வடிகாலுக்கு செல்லும் பாதைகளில் உள்ள குப்பைகள் ஆகியவற்றை அகற்றும் பணியில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக துப்புரவு பணியாளர்களை கொண்டு தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் தலைமையில் பேரூராட்சி தூய்மைபணி ஊழியர்கள் சார்பாக அனைத்து வார்டு பகுதிகளில் நடைபெறும் இந்த பணி பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.இப்பணியை போல் பொதுமக்களின் கோரிக்கையாக அனைத்து வார்டு பகுதிகளிலும் மழை காலத்திற்கு முன்பாக ஆய்வு செய்து எந்தவித விபத்தும் நடைபெறாமல் இருக்க அனைத்துத் துறை சார்பாக உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். உதாரணமாக, குடவாசல் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட நன்னிலம்-குடவாசல் சாலையில் காமராஜர் நகரின் அருகே உள்ள சாலையில் பழமையான புளியமரம் ஒன்று சாலை ஓரம் உள்ளது.இந்த புளியமரம் வலுவிழந்து உள்ள நிலையில் நன்னிலம் சாலையில் போகும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் வேகமாக காற்று அடித்தால் சாலைகளில் போகும் நபர்கள் மீது விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.அண்மையில் சென்னையில் கே.கே.நகர் சாலையில் உள்ள மரம் விழந்து நடந்த துயர சம்பவம்போல் எதுவும் நடைபெறும் முன்பாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக பட்டுப்போன, வலுவிழந்தை புளியமரத்தை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்….

The post குடவாசல்- நன்னிலம் சாலையில் வலுவிழந்து நிற்கும் பழமையான புளியமரத்தால் விபத்து அபாயம்-உடனடியாக அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kudavasal-Nannilam road ,Valangaiman ,Kamaraj Nagar ,Kudavasal ,Dinakaran ,
× RELATED வாகனங்களை சிறைபிடித்து பொதுமக்கள்...