×

பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட ஆலோசனை கூட்டம்

சென்னை: பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் குறித்து அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் கீழ் உள்ள ஆழியாறு அணையிலிருந்து, ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக, கூட்டுக் குடிநீர் திட்டம் ஒன்றை செயல்படுத்திட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உத்தேசித்துள்ளது.இத்திட்டத்திற்காக ஆழியாறு அணையிலிருந்து நீர் எடுப்பதற்கு பி.ஏ.பி பாசன விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே இப்பிரச்னை குறித்து அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து, சுமுக தீர்வு காண்பதற்காக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஜூலை 1ம் தேதி, சென்னை, தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Parambikulam Deuriyar Project Consulting Meeting ,Chennai ,Thuraymurugan ,K.R. N.N. ,Nehru ,Tamil Nadu ,Needlefield Deep Project Consulting ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு