×

கோயில் திருப்பணி என்ற பெயரில் லட்சக்கணக்கில் வசூல் புகார் யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திடம் விசாரணை நடத்தலாம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோயில் திருப்பணி என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திடம் போலீசார் விசாரணை நடத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிகளுக்காக முறைகேடு குறித்து சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் மற்றும் கோயிலின் செயல் அலுவலர் அளித்த புகாரில் பாஜ ஆதரவாளரும், யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டார். தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்திக் கோபிநாத்  உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் தரப்பில் வங்கி கணக்கு விவரம் இன்னும் கிடைக்கவில்லை என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரரிடம் போலீசார் விசாரணை நடத்த தடை விதிக்கப்படுகிறது. இந்நிலையில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி, விசாரணைக்கு தடை விதித்தால் ஆதாரங்களை சேகரிக்க முடியாது என்பதால் தடையை நீக்க வேண்டும் எனக் கோரினார். இதையடுத்து, புலன் விசாரணையை தொடர அனுமதித்த நீதிபதி, வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டார்….

The post கோயில் திருப்பணி என்ற பெயரில் லட்சக்கணக்கில் வசூல் புகார் யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திடம் விசாரணை நடத்தலாம்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : YouTuber ,Karthik Gobinath ,Temple Tiruppani ,Chennai ,Temple Tirupani ,Temple Thirupani ,Karthik Gopinath ,
× RELATED யூடியூபர் சங்கர் வழக்கு விவகாரம்;...