×

பத்ராக் ஷி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே உள்ள குச்சிப்பாளையம் கிராமத்தில் உள்ள பத்ராக் ஷி அம்மன் பாண்டீஸ்வரர், பகவதி அம்மன், கொங்காளம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, கடந்த 24ம் தேதி காலை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு பால், சந்தனம், தயிர், மஞ்சள் உள்பட 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் திருப்பணி கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : Kumbhabhishek Festival ,Badrakshi Amman Temple ,
× RELATED சின்னமுத்தூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா