×

சாதி ரீதியாக பிளவுபடுத்த முயற்சி; ஓபிஎஸ் மீது செல்லூர் ராஜூ மறைமுக தாக்கு

மதுரை: கடந்த 23ம் சென்னையில் நடந்த அதிமுக ெபாதுக்குழு கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் அவமானப்படுத்தப்பட்டனர். அன்று மாலையே தனது ஆதரவாளர்களுடன் டெல்லி சென்ற ஓபிஎஸ், அதிமுகவில் தன்னை ஓரங்கட்டும் முயற்சி நடக்கிறது என்று பிரதமர் மோடியிடம் புகார் செய்தார். பின்னர் சென்னை திரும்பிய அவர் இன்று மதியம், விமானம் மூலம் மதுரை வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் மதுரையில் செய்தியாளர்களிடம் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது: சாதி ரீதியாக அதிமுகவை பிளவுபடுத்த முயற்சி நடக்கிறது. அதிமுக தொண்டர்களை பிரித்து, தேசிய கட்சியில் சேர்த்து விடலாம் என்று யாராவது நினைத்தால், அது நடக்காது. சாதி வேறுபாடுகளை அதிமுகவில் தொண்டர்களாக இருப்பவர்கள் பார்ப்பதில்லை. எம்ஜிஆரின் ரசிகர்களே அதிமுக தொண்டர்கள். இயக்கத்தை ஆழமாக நேசிப்பவர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். காசுக்கு வேஷம் போடுபவர்கள் எங்கள் பக்கம் இல்லை. வரும் ஜூலை 11ம் ேததி, திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு சென்னையில் நடைபெறும் என்றார்….

The post சாதி ரீதியாக பிளவுபடுத்த முயற்சி; ஓபிஎஸ் மீது செல்லூர் ராஜூ மறைமுக தாக்கு appeared first on Dinakaran.

Tags : Sellore Raju ,OBS ,Madurai ,Chennai ,O.K. Bannerselvam ,Dinakaran ,
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு