×

பள்ளிப்பட்டு அருகே பெயரளவில் நடைபெறும் கழிவுநீர் கால்வாய் பணி: பொதுமக்கள் குற்றச்சாட்டு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம்,  எஸ்.கே.ஆர்.பேட்டை ஊராட்சியில்  பொம்மராஜிபேட்டை கிராமம் உள்ளது.  இங்கு மேட்டு தெரு முதல் மெயின் ரோடு வரை குடியிருப்புகளுக்கு அருகில் தெருவில் கழிவு நீர் தேங்கி நிற்பதை தடுக்க சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் 15வது நிதிகுழு மானியத்திலிருந்து ₹8.50 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் கடந்த 5 நாட்களாக  நடைபெற்று வருகிறது. இதில், கழிவுநீர் கால்வாயில் தேங்கி நிற்காமல், எளிதாக செல்ல ஏதுவாக பணிகள் மேற்கொள்ளாமல் சாலை மட்டத்திற்கு ஒரு பகுதியில், மற்றொரு பகுதியில் அதிக அளவில் பள்ளம் எடுத்தும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள், திட்டமிடுதலின்றி பெயரளவில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், `குடியிருப்போர் வீடுகளுக்கு சென்று வர, அவதிப்படுவதோடு, கழிவு நீர் கால்வாயில் தேக்கம் அடைந்து கொசு தொல்லை அதிகரித்துள்ளது. எனவே, சீரான முறையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளனர். …

The post பள்ளிப்பட்டு அருகே பெயரளவில் நடைபெறும் கழிவுநீர் கால்வாய் பணி: பொதுமக்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Pallipatu ,Pallipattu ,Pommarajipetai ,Pallipattu Union ,SKRpet Panchayat ,Metu Street ,Dinakaran ,
× RELATED பள்ளிப்பட்டு அருகே காட்டுப்...