×

காசி விசுவநாதசுவாமி கோயிலில் மாசி திருவிழா : தென்காசியில் தேரோட்டம் கோலாகலம்

தென்காசி: தென்காசி காசி விசுவநாதசுவாமி கோயில் மாசி மகப்பெருவிழாவில் 9ம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தென்காசி காசி விசுவநாதசுவாமி கோயிலில் மாசி திருவிழா, கடந்த 10ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படி தீபாராதனை, மாலையில் ஆன்மீக சொற்பொழிவு, பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதி உலா நடந்து வருகிறது.

9ம் நாளான நேற்று காலை சிவனடியார்களின் சிவ பூத கண வாத்தியங்கள் முழங்க தேரோட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன், தெற்கு பிரிவு ஆய்வர் கணேஷ் வைத்திலிங்கம், கணக்கர் பாலு, அதிமுக நகர செயலாளர் சுடலை, அரசு வழக்கறிஞர் கார்த்திக்குமார், வெள்ளப்பாண்டி, முருகன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி, சாமி, கூட்டுறவு மாரிமுத்து, சுப்புராஜ், சிந்தாமணி காமராஜ், அன்னையாபாண்டியன், அமமுக மாநில பொதுக்குழு முத்துக்குமார், நகர செயலாளர் துப்பாக்கிபாண்டியன், ஜெ.பேரவை கோபால், அண்ணா தொழிற்சங்கம் ராமர், வக்கீல் சண்முகசுந்தரம், பாஜ நகர தலைவர் திருநாவுக்கரசு, சங்கரசுப்பிரமணியன், ராஜ்குமார்,  காங்கிரஸ் மாடசாமிஜோதிடர், வைகைகுமார், சுப்பிரமணியன், தமாகா கண்ணன், சபரிமுருகேசன், இந்து முன்னணி இசக்கிமுத்து, லட்சுமிநாராயணன், கார்த்திக், பூக்கடை மாணிக்கபிள்ளை, துரைமீனாட்சிநாதன், அபிநயாகண்ணன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

முதலில் சுவாமி தேரும், பின்னர் அம்பாள் தேரும் ஒன்றன் பின் ஒன்றாக இழுக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி சக்திவேல், இன்ஸ்பெக்டர் ஆடிவேல், தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ராஜாமணி, போக்குவரத்து ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் செய்திருந்தனர். இன்று (19ம் தேதி) மாசி மகப்பெருவிழா நடக்கிறது. காலையில் தீர்த்தவாரி, அபிஷேக அலங்கார தீபாராதனை, மாலையில் புஷ்பாஞ்சலி, இரவில் சுவாமி அம்பாள் வீதி உலா, வாணவேடிக்கை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் அனைத்து சமுதாய பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Masjid ,festival ,Kasi Viswanathaswamy ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...