×

ராசியான மாசி மகம்

மாசி சரடு பாசிபடரும் என்பார்கள். மாசி மாதம் நல்ல யோகம், திதி கூடிய ஒரு வெள்ளிக்கிழமை அன்று காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து, மாங்கல்ய சரடை சுமங்கலிப் பெண்கள் அணிந்து கொண்டால் தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. மாசி வெள்ளிக்கிழமை கட்டப்படும் மஞ்சள் சரடு பாசி படரும் வரை நிலைத்திருக்கும். அதாவது நீண்ட காலம் நிலைத்து நிற்கும் என்பதே இந்த பழமொழியின் பொருள்.

சுவாமி மலையில் அப்பன் சிவனுக்கு முருகப் பெருமான் உபதேசம் செய்தது மாசி மகம் அன்றுதான். இரண்யாட்சனை சம்ஹாரம் செய்து, பாதாளத்தில் இருந்து பூமியை மகா விஷ்ணு வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்தது மாசி மகம் அன்றுதான்.

சி. லட்சுமி

Tags :
× RELATED சுந்தர வேடம்