×

டிமான்ட்டி காலனி 2 படத்துக்கு யு/ஏ

சென்னை: தமிழில் திரைக்கு வந்த ‘டிமான்ட்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’, ‘கோப்ரா’ ஆகிய படங்களை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள ஹாரர் திரில்லர் படம், ‘டிமான்ட்டி காலனி 2’. இது முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். வரும் 15ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இப்படத்துக்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால், தியேட்டர்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கலாம். 2 மணி நேரம், 24 நிமிடங்கள் வரை படம் ஓடுகிறது. கடந்த 2015ம் ஆண்டு இப்படத்தின் முதல் பாகம் திரைக்கு வந்தது. தற்போது 9 வருட இடைவெளிக்குப் பிறகு 2வது பாகம் வருகிறது.

 

The post டிமான்ட்டி காலனி 2 படத்துக்கு யு/ஏ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Ajay Gnanamuthu ,Arulnidhi ,Priya Bhavani Shankar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அருள்நிதியின் டிமான்ட்டி காலனி 2 ரூ.31 கோடி வசூல் வேட்டை