×

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 15 வயது சிறுவன் கைது

தண்டையார்பேட்டை: சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமிக்கு, கடந்த சில நாட்களாக அவரது உறவினர் மகனான 15 வயது சிறுவன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறான். இதனால் அந்த சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து பெற்றோர் விசாரித்தபோது, தனக்கு உறவுக்கார சிறுவன் பாலியல் தொல்லை கொடுப்பதை அந்த சிறுமி அழுதபடி கூறியிருக்கிறார்.இதுகுறித்து தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று மாலை சிறுமியின் தாய் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி, அந்த சிறுவனை பிடித்து விசாரித்தார். விசாரணையில், அவர் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரியவந்தது. இப்புகாரின்பேரில் போலீசார் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து, 15 வயது சிறுவனை கைது செய்து விசாரிக்கின்றனர்….

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை: 15 வயது சிறுவன் கைது appeared first on Dinakaran.

Tags : PHANDADARBATE ,Chennai Varanarapet ,
× RELATED போதைப்பொருள் கலந்த ஐஸ் விற்ற எஸ்.எஸ்.ஐ...