×
Saravana Stores

காங்கயம் உடையார் காலனியில் கூண்டிற்குள் புகுந்து கிளிகளை விழுங்கிய பச்சை பாம்புகள்

காங்கயம்: காங்கயம் உடையார் காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது வீட்டில் 2  கூண்டுகளில் 8 கிளிகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சண்முகசுந்தரத்தின் மகன் ரவி கிளிகள் கத்தும் சத்தத்தை கேட்டு வெளியே வந்துள்ளார். அப்போது 2 கூண்டிற்குள்ளும் சுமார் 5 அடி நீளமுள்ள 2 பச்சை பாம்புகள்  உள்ளே படுத்துக் கிடந்தது. மேலும் ஆசையாக வளர்த்து வந்த 8 கிளிகளில் 4  கிளிகளை 2 பாம்புகளும் விழுங்கியது தெரியவந்தது. இதனால் அந்த 2 பச்சை  பாம்புகளும் நகர முடியாமல் கூண்டிற்குள்ளேயே படுத்துக்கிடந்ததும்  தெரியவந்தது. இதையடுத்து ரவி காங்கயம் தீயணைப்பு துறையினைருக்கு  தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடம் வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் கூண்டிற்குள் இருந்த 2 பாம்புகளையும்  வெளியே எடுக்க முயற்சி செய்தனர். ஆனால் 2 பாம்புகளும் வெளியே வர  அடம்பிடித்ததால் பாம்புகளுடனேயே கூண்டுகளை  தூக்கிச் சென்றனர்.பின்னர் தீயணைப்பு வீரர்கள் அந்த 2 பாம்புகளையும் காங்கயம்  அருகே உள்ள ஊதியூர் காப்பு காட்டில் விடுவித்தனர்….

The post காங்கயம் உடையார் காலனியில் கூண்டிற்குள் புகுந்து கிளிகளை விழுங்கிய பச்சை பாம்புகள் appeared first on Dinakaran.

Tags : Kangyam Stiyar ,Kangayam Udaiyar ,Kangam ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழகம் நாகையில் பேரணி